முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் அறிவிப்பால் அவதியாகும் விவசாயிகள்

வியட்நாமில் அமெரிக்க  ஜனாதிபதி குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி மானியமாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், ட்ரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.

ட்ரம்பின் ஒப்பந்தம் 

ட்ரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பால் அவதியாகும் விவசாயிகள் | Trump Build Golf Club In Vietnam Farmers Eviction

அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.

990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.