மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம (36.475 கி.மீ) பகுதிக்கு சீனாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடன் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான
அரசாங்க நிதிப்பற்றிய குழு ஆய்வு செய்த போதே இதனை தீர்மானித்துள்ளது.
முன்னர் கோரப்பட்ட 2.5% நிலையான வட்டி விகிதத்தை சீனா நிராகரித்த நிலையில்,
தற்போது 3.5% வரை அதிகரிக்கக்கூடிய மிதக்கும் வட்டி விகிதத்தை (Floating Rate)
ஏற்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டுக் கடன்
இந்த ஏற்பாடு இலங்கைக்குச் சாதகமற்றதாக அமையலாம் என்று குழுத் தலைவர் ஹர்ஷ டி
சில்வா எச்சரித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ரூ. 310 பில்லியன் உள்நாட்டுக் கடன்களைச்
செலுத்த, ரூ. 36 பில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
நாட்டின் மொத்தக் கடன் நிலுவை, 37 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள்
மற்றும் ரூ. 19.6 டிரில்லியன் உள்நாட்டுக் கடன்கள் என அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டது.
சரியான தொகை
ஆனால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தவணைகளின் சரியான தொகையை அதிகாரிகளால் கூற
முடியவில்லை.

இதனால், கடன் நிர்வாகத்திற்குப் போதிய திறமையான ஊழியர்கள் இல்லை
என்று குழுத் தலைவர் கவலை தெரிவித்தார்.

