நீதித்துறை சேவைக்கான நெறிமுறைகளை வரைவதற்கு நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டிற்கான பாதீட்டினை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்ற நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்குத் தடை
ஊழல் என்பது ஏழைகள் மீது திணிக்கப்படும் வரி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஒரு தடையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் முறைகேடுகளை மேலும் தடுக்கும் பொருட்டு அரசாங்கம் மிக விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

