நாடளாவிய ரீதியில் நிலவி வரக்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வரவு செரவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (28.11.2025) மற்றும் நாளை மறுதினம் (29.11.2025) நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

