வில்லனாக விஜய் சேதுபதி
ஹீரோ – வில்லன் இந்த இரண்டிலும் பட்டையை கிளப்பும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை.
ஆனால், தற்போது விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.


அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
இயக்குநர் ரவி கிரண் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இதில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.
சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி என சம்பளம் வாங்கியுள்ளார் என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.


