இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்றையதினம்(22) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்கள் பெற்று 9 விக்கெட்டுக்களை இழந்தது.
இமாலய சாதனை
குறித்த போட்டியில் முகமது நபியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.

சஹல் 153 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவரது சிறந்த பந்துவீச்சு 5/40 ஆகும்.
8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியவில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
சஹல் – 200 விக்கெட்டுகள்
டி.ஜே.பிராவோ – 183 விக்கெட்டுகள்
பியூஷ் சாவ்லா – 182 விக்கெட்டுகள்
புவனேஷ்வர்குமார் – 174 விக்கெட்டுகள்
அமித் மிஸ்ரா – 173
விக்கெட்டுகள்
சுனில் நரைன் – 172 விக்கெட்டுகள்
ரவி அஸ்வின் – 172 விக்கெட்டுகள்
லசித் மலிங்கா – 170 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா – 158
விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா – 156 விக்கெட்டுகள்
Source: https://ibctamil.com/article/ipl-2024-rajastan-royals-chahal-creates-history-1713847058

