முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் விபத்து – சாரதி காயம்

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 20ஆம் பேரியல் பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இன்று (08) காலை இடம்பெற்றுள்ளதுடன், டிப்பர் வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்ததாக தெரியவந்துள்ளது.

மகாவலி ஆற்றுப் பகுதியில் மணல் ஏற்றிச் செல்லும் நோக்கில் ஹபரணை பகுதியிலிருந்து வந்த டிப்பர் வாகனம், ஹபரணையிலிருந்து சூரியபுர நோக்கி சேருவில வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது 20ஆம் பேரியல் பகுதியில் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் அவசர ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினால் டிப்பர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சூரியபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/tipper-carrying-sand-met-with-an-accident–driver-injured-1780917252

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்