முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் புதிய வீடமைப்பும் ஆரம்பம்

‘டித்வா’ சூறாவளியினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

இச்சூறாவளி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவர்களுக்கான 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குதல் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுதல் என்பன இதன்போது இடம்பெற்றன.

இதில் அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 499 ஆகும்.

அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புப் பணிகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், தமக்கென ஒரு வீட்டை அமைத்து பாதுகாப்பாக வாழ்வதே இக்குடும்பங்களின் எதிர்பார்ப்பு எனவும், அதனை விரைவாக நிறைவேற்ற முடிந்தது மக்கள் பெற்ற வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளில் பெரும்பாலானவை குடிசை வீடுகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/compensation-and-new-house-construction-begin-for-families-affected-by-cyclone-dithwa-in-mullaitivu-1782105509

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்