இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது.
மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் பொன்தில் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்த பயிற்சிபட்டறை நடாத்தப்பட்டது.
இதில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் 31 பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் 70 பேர் கலந்து தங்கள் பாடசாலை மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான பல புதிய விடயங்களை கற்பிக்கும் நோக்கில் இந்த பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையில் பாலர் பாடசாலை மாணவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் செயற்பாடாக சிறுவர் அபிவிருத்தி திட்டம் என்பது முக்கிய இடத்தினைக்கொண்டிருந்தது.
இந்த பயிற்சி பட்டறையில் 7 முக்கிய விடயங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் மிகவும் ஆர்வதுடன் செய்யப்பட்டனர் . 2027 ஆம் ஆண்டிற்கான புதிய செயற்பாடான ‘இந்த உலகினை புரிந்துகொள்வது’என்ற விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முக்கிய விடயமாகும்.
இந்த மூன்றுநாள் பயிற்சி பட்டறையில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் டிலானி பன்டர் இங்கிலாந்தில் இருந்து வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
Source: https://samugammedia.com/3-day-residential-training-workshop-for-preschool-teachers-1783009498

