முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதி அமைச்சர் பதவி விலகி மன்னிப்பு கோர வேண்டும்! – அஜித் மான்னப்பெரும வலியுறுத்து

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்  கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வலியுறுத்தினார்.

கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட அவர், “மோதல் இடம்பெற்ற முதல் நாளிலேயே இரண்டு கைதிகள் மட்டுமே உயிரிழந்திருந்தனர். அன்று சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அங்கிருந்து அகற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது. எமது சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.

விடயத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் எந்தத் தகவலும் இன்றி இருந்தார் என்றும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வது போன்றே ஊடகங்களுக்குப் பதிலளித்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“பொறுப்புவாய்ந்த அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சரியாகச் செயற்பட்டிருந்தால் இந்தத் துயரத்தைத் தடுத்திருக்கலாம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசு எடுத்த தீர்மானத்தை வரவேற்ற அஜித் மான்னப்பெரும, அதேநேரம் உயிரிழந்த கைதிகளின் விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சிறையில் இருந்த அனைவரும் குற்றவாளிகள் அல்லர், அவர்களில் சந்தேகநபர்களும் அடங்குவர் என்பதால், அவர்களுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

Source: https://samugammedia.com/the-minister-of-justice-should-resign-and-apologize—ajith-mannapperuma-emphasizes-1783916299

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.