முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நவகமுவில் துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு! பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

கொழும்பு மாவட்டத்தின் கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

குறித்த இளைஞர் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து அவர் அவசரமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/gunfire-in-navakamu-25-year-old-young-man-dies-police-reveal-suspicion-1784253276

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்