முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுகாதார துவாய்களுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயம் – ஒக்டோபர் முதல் வரும் அதிரடித் தடை

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், போக்குவரத்து செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS தரச்சான்றிதழ் முத்திரையை கொண்டுள்ள பெண்களுக்கான சுகாதாரத் துவாய்கள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஒருமுறை பயன்படுத்தப்படும் சுகாதாரத் துவாய்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் மெல்லிய சுகாதாரத் துவாய்கள் (Panty Liners) ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் இறக்குமதி தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முறையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நிலையில், அவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல் அல்லது விற்பனை செய்தலும் தடை செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் குறித்த தயாரிப்புகளுக்கான தரநிலைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களும் இந்த உத்தரவின் கீழ் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/sls-certification-is-mandatory-for-hygiene-pipes–immediate-ban-from-october-1784261105

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.