ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதி தெரிவு குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகியதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்காக அப்பொழுது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி தெரிவு குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/prez-ranil-2-years-complted-1721494019

