வீர தீர சூரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் உருவான வீர தீர சூரன் படம் கடந்த 27ம் தேதி வெளிவரவிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சி தடைபட்டது.
அதன்பின் மதியம் 12 மணி காட்சியும் தடைபட்ட நிலையில், அதன்பின் படத்தின் மீது இருந்த தடை நீங்கி, நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாலை 4 மணி முதல் காட்சி திரையிடப்பட்டது.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து இளம் நடிகை துஷாரா விஜயன், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பாக ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/veera-dheera-sooran-3-days-box-office-1743301658

