முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித் தொடர்பாக சிறுபிள்ளைத்தனமாக விமர்சனம் செய்யும் அநுர: இம்ரான் எம்.பி காட்டம்

Courtesy: H A Roshan

 முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சஜித் தொடர்பாக அநுர குமார செய்யும் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மூதூரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அநுரவின் கருத்து

”அண்மையில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் சஜித் பிரேமதாச தொடர்பாக சிறு பிள்ளைத்தனமான விமர்சனங்களை அநுர முன்வைத்தார்.

சஜித் தொடர்பாக சிறுபிள்ளைத்தனமாக விமர்சனம் செய்யும் அநுர: இம்ரான் எம்.பி காட்டம் | Anura Kumara Giving Obituary Regarding Sajith

திகன ,மினுவான்கொடை கலவரங்களின் போது சஜித் பிரேமதாச என்ன செய்தார் என கேட்டிருந்தார். ஆனால் அப்போது ஜனாஸா எரிப்பின் போது சஜித் என்ன செய்தார் என அவர் கேட்கவில்லை.

அவரால் அவ்வாறு கேட்கவும் முடியாது. அநுரகுமாரவே அப்போது சஜித் என்ன செய்தார் என நான் இப்போது கூறுகிறேன்.

அந்த வேளையில் சஜித் நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ எதிர்கட்சி தலைவரோ அல்லது உங்களை போன்று ஒரு கட்சியின் தலைவரோ அல்ல.

வீடமைப்பு அமைச்சர்

அவர் வீடமைப்பு அமைச்சர் மட்டுமே. அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட மினுவான்கொடை, குருநாகல் பிரதேச 21 பள்ளிவாயல்களின் புனர்நிர்மாணத்துக்கு சஜித் பிரேமதாசவே நிதி உதவி செய்திருந்தார்.

சஜித் தொடர்பாக சிறுபிள்ளைத்தனமாக விமர்சனம் செய்யும் அநுர: இம்ரான் எம்.பி காட்டம் | Anura Kumara Giving Obituary Regarding Sajith

அந்த நிகழ்வுகளில் சஜித் பிரேமதாசவுடன் நானும் முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டிருந்தோம்.

அதன்பின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இது தொடர்பாக நான், முஜிபுர் ரஹ்மான் மரைக்கார் உள்ளிட்ட உறுப்பினர்களே குரல் எழுப்பியிருந்தோம்” என்றார்.

Source: https://tamilwin.com/article/anura-kumara-giving-obituary-regarding-sajith-1725180915

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்