ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கு துரோகம் இழைத்த எவருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனுக்களை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyawasam) கொழும்பில் (Colombo) இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்த ஒரு பிரிவினர் உள்ளனர்.அந்த பிரிவினரின் அரசியல் நிலவரம் பற்றி நான் பேச விரும்பவில்லை.
மொட்டு சின்னம்
கட்சிக்கு துரோகம் செய்த யாருக்கும் மீண்டும் கட்சியில் உயர்பதவிகளோ, வேட்புமனுவோ வழங்கப்படமாட்டாது, அவர்களை ஏற்க மாட்டோம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மொட்டு சின்னத்தில் போட்டியிடும். என்றார்.
Source: https://ibctamil.com/article/slpp-party-has-no-place-for-traitors-sagara-said-1727704642

