முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி! திருகோணமலையில் பரபரப்பு

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுபிட்டி கிராம சேவகர் பிரிவில், கடற்கரையை அண்டிய தேவிக்கல் பகுதியில் தொல்லியல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட துப்பரவு நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்களால் இன்று சனிக்கிழமை (05) குறித்த பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் வகையில் துப்பரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படாமல், குறித்த பகுதி தொல்லியல் இடம் எனக் கூறி துப்பரவு செய்து கட்டிடம் அமைக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வார இறுதி நாளான சனிக்கிழமையில் இவ்வாறான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/attempt-to-build-an-illegal-structure-claiming-it-as-an-archaeological-site-uproar-in-trincomalee-1788591478

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்