முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு! – எதிர்த்து வாக்களிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில், இரண்டாம் நாளான இன்று இரவு 7 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

விவாதம் நிறைவடைந்ததும் மேற்படி சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு கோரப்படவுள்ளது.

இந்தச் சட்டமூலங்களின் அரசமைப்புத் தன்மை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கமைய, 22 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தைச் சாதாரண பெரும்பான்மையுடனும் நிறைவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவ்விரு சட்டமூலங்களையும் குறைந்தது 158 பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிகரமாக நிறைவேற்ற ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளது.

ஆளும் தரப்பின் இந்த முயற்சியை எதிர்க்கும் வகையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/vote-on-the-22nd-amendment-bill-today–opposition-parties-decide-to-vote-against-it-1790314235

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்