Home உலகம் லண்டனில் விழுந்து நொருங்கியது விமானம் : சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை

லண்டனில் விழுந்து நொருங்கியது விமானம் : சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை

0

லண்டனில்(london) விமானம் ஒன்று வயல்வெளிபகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) மதியம் ஒரு மணியளவில் அப்மின்ஸ்டரில் உள்ள அவெலி சாலையில் ஒரு பகுதியில் “இந்த இலகுரக” விமானம் விழுந்தது.

வயல்வெளியில் விழுந்த விமானம்

விமானம் ஒன்று அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொருங்கியதாக தகவல் கிடைத்ததையடுத்து, பெருநகர காவல் துறையினர்(Metropolitan Police) சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

லண்டன் அம்புலன்ஸ் சேவை மற்றும் எசெக்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஆகியவை சம்பவ இடத்தில் காவல்துறையினருடன் இணைந்து கொண்டன.

விமானம் எங்கிருந்து வந்தது

ஆனால் விபத்துக்குள்ளான விமானம் எங்கிருந்து வந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து ஆண் பயணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது காயத்தின் அளவு தெரியவில்லை.

NO COMMENTS

Exit mobile version