ரஷ்ய(russia) இராணுவத்தின் ஆயுத களஞ்சியசாலை ஒன்றின் மீது உக்ரைன்(ukraine) ஆளில்லா விமானம் ஒன்று நடத்திய துல்லியமான தாக்குதலில் அந்த களஞ்சியசாலை பற்றியெரிவதுடன் அப்பகுதி மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அத்துடன் ரஷ்யாவின் Ostrogozhsky மாகாணத்தில் அவசரநிலை (declared a state of emergency) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Ostrogozhsky மாகாணத்தில் உள்ள Voronezh என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலை ஒன்றின் மீதே அதிகாலை 03 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பற்றி எரியும் ஆயுத களஞ்சியசாலை
இந்த தாக்குதலை அடுத்து ஆயுத களஞ்சியசாலை வெடித்து சிதறி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனையடுத்து மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதுடன் அங்குள்ள Soldatskoye என்னும் கிராமத்தில் வாழும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 50 மைல் தொலைவிலுள்ள வேறொரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள், தற்காலிக தங்கும் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவரவில்லை.
காணொளியை காண