Home உலகம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

0

இந்தியாவின்(india) ஏர் இந்தியா விமானம் நேற்று(15) அதிகாலை அவசரமாக கனடாவில்(canada) தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த நிலையிலேயே இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் 

குறித்த போயிங் ரக ‘ஏர் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்தே இந்த தரையிறக்கம் நிகழ்ந்துள்ளது.

இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்ட நிலையில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதா என சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் மிரட்டல்

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையிலிருந்து(mumbai) அமெரிக்காவின் நியுயோர்க்(new york) நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா(air india) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை அடுத்து விமானம் அதிகாலைவேளை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version