Home உலகம் அகமதாபாத் விமான விபத்து : பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

அகமதாபாத் விமான விபத்து : பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

0

 அகமதாபாத் விமான விபத்தை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம், டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இரண்டு நிவாரண விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

பயணிகளின் உறவினர்கள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களுக்காக இந்த விமான சேவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடவுள்ள விமானங்களின் விபரம் வருமாறு,

IX1555 – டெல்லி-அகமதாபாத்
புறப்படும் நேரம்: ஜூன் 12 அன்று 2300 மணி

IX1556 – அகமதாபாத்-டெல்லி
புறப்படும் நேரம்: ஜூன் 13 அன்று 0110 மணி

AI1402 – மும்பை-அகமதாபாத்
புறப்படும் நேரம்: ஜூன் 12 அன்று 2300 மணி

AI1409 – அகமதாபாத்-மும்பை
புறப்படும் நேரம்: ஜூன் 13 அன்று 0115 மணி 

இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பயணிகளின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் 1800 5691 444 என்ற எங்கள் தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம்.

மேலதிகமாக, சர்வதேச இடங்களிலிருந்து வந்து பயணிக்க விரும்புவோர் +91 8062779200 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version