Home உலகம் நதியில் விழுந்த அமெரிக்க விமானங்கள் – இந்திய பிரதமர் மோடி இரங்கல்

நதியில் விழுந்த அமெரிக்க விமானங்கள் – இந்திய பிரதமர் மோடி இரங்கல்

0

புதிய இணைப்பு

அமெரிக்க விமான விபத்தில் (American Airlines jet) உயிரிழந்தோருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி (Prime Minister Narendra Modi) இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது சமூகவலைத்தள பதிவில்,

“வொஷிங்டன் டி.சி.யில் நடந்த துயர விபத்தில் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இந்தத் துயரில் அமெரிக்க மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

64 பேருடன் சென்ற அமெரிக்க பயணிகள் விமானம், ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஒரு இராணுவ உலுங்கு வானூர்தியுடன் மோதி போடோமாக் நதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த நிலையில், மீட்புக் குழுக்கள் இதுவரை நதியில் இருந்து சுமார் 18 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, உறைபனி நிலையில் தீயணைப்பு படகுகளும் சுழியோடிகளும் (Divers) தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

முதலாம் இணைப்பு

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் (American Airlines) ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) உலங்குவானுர்தி உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து நேற்று (30.1.2025) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் நிகழ்ந்ததாக விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

நேருக்கு நேர் மோதி

விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானத்தில் 65 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீகன் வாஷிங்டன் (Reagan National Airport) தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி வந்துகொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

பயணிகளின் கதி

இதையடுத்து, வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு திரண்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version