Home உலகம் மூன்றாம் உலகப் போருக்கு தயாரா? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

மூன்றாம் உலகப் போருக்கு தயாரா? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

0

ஈரான் (Iran) – இஸ்ரேல் (Israel) போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் ஈரான் தற்போது அதிர்ச்சி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (13) இரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் மீது வெடிப்புகள் வானத்தை ஒளிரச் செய்தன, இது பரவலான பீதியையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

வான்வழித் தாக்குதல்

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை இரண்டாவது அலை தாக்குதல்கள் ஜெருசலேம் முழுவதும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.

டெல் அவிவ் நகரில் இரண்டு ஏவுகணைகள் தரையில் மோதியதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளன. 

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்த நிலையில் தாக்குதல்களும் சரமாரியாக இடம்பெற்றது.

காணொளி

இவ்வாறான பின்னணியில், தற்போது ஈரான் தனது ஆயுத பலத்தை காண்பிக்கும் வகையில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் நவீன ரக ஏவுகணைகள் மற்றும் உயர்தர ட்ரேன்கள் என்பன பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணொளியில் “நீங்கள் 3 ஆம் உலகப் போருக்கு தயாரா?” எனவும் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானலும் 3 ஆம் உலகப் போர் வேடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version