Home உலகம் பலஸ்தீனக் கோஷம்: இஸ்ரேல் பேரணியில் தீவைத்து பதற்றம்

பலஸ்தீனக் கோஷம்: இஸ்ரேல் பேரணியில் தீவைத்து பதற்றம்

0

கொலராடோவில் இஸ்ரேல் (Israel) ஆதரவு பேரணியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் ஆறு பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் (Gaza) ஹமாஸால் (Hamas) பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூரும் வகையில் கொலராடோவின் போல்டரில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பேரணியில் இருந்த மக்கள் மீது ஒரு நபர் எரியக்கூடிய திரவத்தை வீசி தீ வைத்ததில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

ஒருவரின் நிலை 

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போல்டர் காவல்துறைத்துறையினர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

67 முதல் 88 வயதுக்குட்பட்ட ஆறு பாதிக்கப்பட்டவர்களும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர குற்றம்

இந்தத் தாக்குதல் தொடர்பாக முகமது சப்ரி சோலிமான் என்பவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய போது குறித்த நபர், “பலஸ்தீனத்தை விடுவிப்போம்” என கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் ஒரு தீவிர குற்றமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version