Home உலகம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் ஆரம்பம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் ஆரம்பம்!

0

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) வருடாந்த கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. 

ஜோர்ஜியாவின் (Georgia) தலைநகர் திபிலிசியில் (Tbilisi) இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.   

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe), ஜோர்ஜியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.   

பொருளாதார அபிவிருத்தி

ஆசிய அபிருத்தி வங்கியின் ஆரம்ப கால உறுப்பினரான இலங்கை, அதன் நிதியுதவி மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான பல்வேறு ஒத்துழைப்புகளை பெற்றுக் கொண்டதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: பதில் வழங்கிய இந்தியா

இதற்கமைய, இந்த ஆண்டு நடைபெறும் வங்கியின் வருடாந்த கூட்டத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான களமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டம் அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கில் திடீர் சுற்றிவளைப்பு: முதன் முறையாக பறிமுதல் செய்யப்பட்ட கோடிகணக்கிலான சொத்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version