Home உலகம் அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 5ஆவது நபர் ஒருவருக்கும் பறவைக் காய்ச்சல் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்

இதனையடுத்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்றும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பறவைக் காய்ச்சல் கிருமி உருமாறி மக்களிடையே எளிதில் பரவக்கூடிய தன்மையைப் பெற்றால் பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

இந்தநிலையில், பறவைக் காய்ச்சல் தொற்றியவர்களுக்குத் தற்போது மிதமான அறிகுறிகளே உள்ளதாகவும், கண்கள் சிவந்திருப்பதாகவும், கண்களில் எரிச்சல் இருப்பதாகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிதமான சுவாசப் பிரச்சினைகளும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version