Home உலகம் இரத்தத்தைப் போல காட்சியளிக்கும் நிலா : வரவிருக்கும் முழு சந்திர கிரகணம்

இரத்தத்தைப் போல காட்சியளிக்கும் நிலா : வரவிருக்கும் முழு சந்திர கிரகணம்

0

பூமி சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இயற்பியலில் சூரிய உதயம் சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறதோ அதே கோட்பாடைக் கொண்டு தற்பொழுது வர இருக்கும் சந்திரகிரகணமும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சந்திரன்

அதாவது, சந்திரனை அடையும் ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஒளிவிலகல் செய்யப்படுவதால் சந்திரன் சிவப்பு நிறமாக மாறும், இது குறுகிய அலைநீளங்களை வடிகட்டி நீண்ட அலைநீள சிவப்பு நிறங்களை மட்டுமே விட்டுச் செல்கிறது.

அதனால் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க இருக்கிறது.

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பூமிக்கு முழு சந்திர கிரகணம் வருகிறது.

இது 2025 மார்ச் 13, 14ஆம் திகதிகளில்  வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதியில் தெரியக்கூடும்.

இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் வரையில் நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version