Home உலகம் இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெளியான பின்னணி

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெளியான பின்னணி

0

ஏர் இந்தியா (Air India) விமானம் உட்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை காவல்துறையினர் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பாதைகளில் மாற்றங்கள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 72 மணி நேரத்தில் 10 க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பல விமானங்கள் தாமதமாகச் சென்றன.

இந்நிலையில் குறித்த மிரட்டல்கள் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்னந்த்கான் பகுதியில் இருந்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது..

கடந்த திங்கள் முதல் மொத்தம் 19 மிரட்டல் பதிவுகள் அந்த கணக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளன. விரைந்து செயற்பட்ட காவல்துறை சம்பவம் தொடர்பில் சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.

சிறுவன் தனது நண்பரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் போலிக் கணக்கை பயன்படுத்தி மிரட்டல் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

போலி வெடிகுண்டு மிரட்டல் 

தற்போது, ​​இந்த வழக்கு அண்மையில் சில விமானங்களுக்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களுடன் தொடர்புடையதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

குற்றம் சாட்டப்பட்டவருக்கு பணம் தொடர்பாக நண்பருடன் சில தகராறு இருந்ததால் இது பழிவாங்கும் சதி என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் விசாரணைக்காக மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர். சிறுவனின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version