Home உலகம் நத்தார் தாத்தாவின் பயணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு!

நத்தார் தாத்தாவின் பயணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு!

0

கனேடிய(Canada) வான்பரப்பின் ஊடாக நத்தார் தாத்தா பயணம் செய்வதற்கு கனடா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல் வெளியிட்டுள்ளார்.

நத்தார் தாத்தா அல்லது சாண்டாவின் பயண ஆவணங்களை தாம் பரிசீலனை செய்ததாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நத்தார் தாத்தா

போக்குவரத்து அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் முதல் தடவையாக அவர் சாண்டாவை சந்தித்துள்ளார்.

இந்த பண்டிகை காலத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கனேடிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நத்தார் தாத்தா எங்கு பயணம் செய்கிறார் என்பதனை கனேடிய பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் மற்றும் சிறுமியர் நத்தார்த் தாத்தாவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version