Home உலகம் கனடாவில் வயது வந்தவர்களுக்கு ஒரு மில்லியன் பரிசுத் தொகையை வெல்லும் வாய்ப்பு

கனடாவில் வயது வந்தவர்களுக்கு ஒரு மில்லியன் பரிசுத் தொகையை வெல்லும் வாய்ப்பு

0

கனடாவில் அmதிஷ்ட லாப சீட்டிழுப்பில் இலவசமாக பங்கேற்று ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கக் கூடிய வாய்ப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ லொட்டரி மற்றும் கேமிங் நிறுவனம் (OLG) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அனைத்து வயது வந்தவர்களும் பரிசுத் தொகையை வெல்லும் வாய்ப்பு

ஒன்டாரியோவில் வாழ்ந்து வரும் அனைத்து வயது வந்தவர்களும் இந்த ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வெல்லும் வாய்ப்பை பெறுகின்றனர்.

 நிறுவனம் தனது 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக “வெல்கம் டு வின்டாரியோ” போட்டி தொடங்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா

“கடந்த 50 ஆண்டுகளாக எங்களுடன் விளையாடியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாங்கள் ஒன்டாரியோவை வின்டாரியோவாக மாற்றுகிறோம்,” என்று போட்டி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் முதல் பரிசு 1 மில்லியன் டொலரும், இரண்டாம் பரிசுகளாக 1,000 டொலர்கள் 50 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி ஓகஸ்ட் 18 முதல் ஒக்டோபர் 19, 2025 வரை நடைபெறும்.

 

NO COMMENTS

Exit mobile version