Home உலகம் குறைந்தது சனத்தொகை : சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

குறைந்தது சனத்தொகை : சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

0

சீனாவில்(china) அண்மைக்காலமாக
இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கல்லூரிகளில் காதல் தொடர்பான பாடங்களை சேர்க்க சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உலக மக்கள் தொகையில் சீனா முதல் இடத்தில்

உலக மக்கள் தொகையில்  சீனா முதல் இடத்தில் இருந்த நிலையில் மக்கள் தொகையை குறைக்க கடுமையான சட்டங்களை இயற்றியது. இதனால் தற்போது மக்கள் தொகை குறைந்துள்ள அதே நேரம் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையை போக்கும் வகையில் சீன அரசு தனது மக்களை அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியதுடன், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

காதல், திருமணம், குடும்ப உறவு புதிய பாடத்திட்டம்

தற்போது சீனாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காதல், திருமணம், குடும்ப உறவு ஆகியவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கற்பிக்குமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version