Home உலகம் வலுக்கும் வர்த்தக போர்: அமெரிக்காவின் வரி விதிப்பு சீனா பதிலடி

வலுக்கும் வர்த்தக போர்: அமெரிக்காவின் வரி விதிப்பு சீனா பதிலடி

0

அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூடுதல் வரி விதிப்புக்கு சீனா (China) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை சீன வர்த்தக அமைச்சகம் (China’s Ministry of Commerce) முன்வைத்துள்ளது.

சிறந்த உதாரணம்

இது தொடர்பில் சீன வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்கா, தன் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.   

இந்தநிலையில், அதேபோன்ற நடவடிக்கையை தன் சொந்த நாட்டிற்காக சீனா எடுத்தால் அமெரிக்கா அதை எதிர்க்கின்றது.

இரட்டை நிலைப்பாடு

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் இரட்டை நிலைப்பாட்டிற்கான ஒரு சிறந்த உதாரணம்.

வர்த்தக போரை நாங்கள் விரும்பவில்லை ஆனால், அதைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

அடிக்கடி அதிக வரி விதிப்புகளை காட்டி மிரட்டுவது சரியான நடைமுறை அல்ல.

வர்த்தக பேச்சு

இது இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுக்கான சூழலை கடுமையாக பாதித்துள்ளது.

அத்தோடு, சீன நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்து, புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

அமெரிக்கா தன் தவறான நடைமுறைகளைத் தொடர்ந்தால், சீனா தன் சட்டப்பூர்வ உரிமைகளையும் மற்றும் தேச நலன்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்” என தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version