உலக நாடுகளை பிரம்மிக்க வைக்கும் வகையில் உலகின் மிகப்பாரிய ட்ரோன் கேரியரை சீனா (China) உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், சீனா உருவாக்கியுள்ள “ஜியு டியான் (Jiu Tian)” வானூர்தி, உலகிலேயே மிகப்பாரிய ட்ரோன் கேரியராக (Drone Carrier) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ட்ரோன்களின் தாய் கப்பலாக (drone mothership) ஆக செயல்பட்டு, ஒரே நேரத்தில் 100 ட்ரோன்களை இயக்கும் திறன் கொண்டது.
பாதுகாப்பு அமைப்பு
11 டன் எடையுடன், 6.6 டன் ட்ரோன் பாரத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த வானூர்தி, 7,000 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் இது இராணுவ மற்றும் சிவிலியன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வானூர்தி, போர் சூழ்நிலைகளில் எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இயற்கை பேரழிவு
இயற்கை பேரழிவுகளின் பின்னர் மீட்பு பணிகளில் கூட இதைப் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
🇨🇳China unleashes a swarm of death — Flying drone carrier ready for launch
Next month, China will launch its first-ever airborne drone carrier — the Jiutian SS-UAV. This 15-ton giant with a 25-meter wingspan can carry over a hundred FPV drones, capable of launching synchronized… pic.twitter.com/aSQgHBWOuG
— NEXTA (@nexta_tv) May 19, 2025
இந்த ட்ரோன் mothership, சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், இது உண்மையில் போர் சூழல்களில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரியது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
