அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் (Donald Trump) விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என சீன (China) அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.
அதன்படி, சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார்.
சீனா எதிர்ப்பு
இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்குச் சீனா தமது எதிர்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமெரிக்கா தமது தவறுகளைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரஸ்பர வரிகள் என்ற தவறான நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.”என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
