Home உலகம் அயர்லாந்தில் இனந்தெரியாதவரின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி :அச்சத்தில் மக்கள்

அயர்லாந்தில் இனந்தெரியாதவரின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி :அச்சத்தில் மக்கள்

0

வடக்கு அயர்லாந்தில் (ireland)நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு அயர்லாந்தில் உள்ள மாகுயர்ஸ்பிரிட்ஜ் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தாக்குலில் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும்

இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய இனந்தெரியாத நபரை காவல்துறையினர்தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

 கிராமத்தில் அமைதியான பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version