Home உலகம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டொனால்ட் ட்ரம்ப்பின் உரை

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டொனால்ட் ட்ரம்ப்பின் உரை

0

அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது, அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கிவிட்டது என தனது முதல் உரையில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் முதல் உரையாற்றினார்.

புதிய ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவரது உரை உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பில்லியன் டொலர்கள் மானியம் 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “அமெரிக்கா (USA) திரும்ப வந்துவிட்டது. அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கிவிட்டது.

பெரிய கனவுகள் மற்றும் தைரியமான செயல்களுக்கான நேரமிது, ஒவ்வொரு நாளும் எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன்.

மேலும், இதுவரை வரலாறு காணாத அளவுக்கு இந்த தேர்தல் நடந்துள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம்.

மெக்சிகோவுக்கும், கனடாவுக்கு பில்லியன் டொலர்களை மானியமாக கொடுக்கிறோம். இனி அது நிறுத்தப்படும்.

உக்ரைன் விவகாரம்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கினால், வாகனக் கடன் வரி குறைப்பு. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வரியை குறைக்க விரும்புகிறோம்.

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் நிகழ்வுகள், கடந்த ஒரு மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளன” என தெரிவித்தார்.

இதேவேளை ட்ரம்ப் தனது முதல் உரையில் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/embed/qYpkC5LNmaQ

NO COMMENTS

Exit mobile version