Home உலகம் சுவிட்சர்லாந்தில் பாராட்டு பெற்ற ஈழத் தமிழரின் உணவு

சுவிட்சர்லாந்தில் பாராட்டு பெற்ற ஈழத் தமிழரின் உணவு

0

சுவிட்சர்லாந்தில்(Switzerland) ஈழத்தமிழர் ஒருவர் நடத்தி வரும் உணவகமொன்று பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த உணவகமானது, ஆரோக்கியமானதும் ஊட்டச்சத்துக்கள் மிக்கதுமான உணவை வழங்குவதாக சுவிட்சர்லாந்தின் அரச தொலைக்காட்சியின் ஊட்டச்சத்து வல்லுனர் அனிதா க்ரோலி தெரிவித்துள்ளார்.

இந்த உணவகமானது,
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் என்பவரினால் நடாத்தப்படுகின்றது.

ஈழத் தமிழரின் உணவு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,“ சுவிட்சர்லாந்தின் பெருநகர் பேர்னில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் (Haus der Religionen – Dialog der Kulturen) சமைத்த உணவை ஆராய்ந்து ஆரோக்கிய உணவுக்கான அளவுகோல்களின்படி உயர்தரம் கொண்ட சிறந்த உணவாக காணப்படுகின்றது.

இந்த உணவகத்தில் இஞ்சி நீர் வழங்கப்படுவதாகவும், அது ஆரோக்கியமானது

கத்திரிக்காய், வற்றாளைக் கிழங்கு, பூசணிக்காய் போன்ற மரக்கறி வகைகளைக் கொண்டு கறிகள் தயாரிக்கப்படுகின்றன.

அரிசி சோறு, பருப்பு கறி என இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் மிகவும் ஆரோக்கியமானது என்பதுடன் சுவையானது .

இந்த உணவு வகைகளில் அதிகளபு புரதச்சத்து காணப்படுவதாகவும் இவற்றில் விலங்குப் புரதங்கள் கிடையாது.

இது ஓர் ஆயுர்வேத அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிறந்த சுவையான உணவு” என பாராட்டியுள்ளார்.

ஈழத் தமிழரின் இந்த ஆரோக்கிய உணவகம் குறித்த காணொளி சுவிஸ் அரச தொலைக்காட்சியான SRF ல் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version