Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் : களமிறங்குகிறார் ரணில் : வெளியானது அறிவிப்பு

அதிபர் தேர்தல் : களமிறங்குகிறார் ரணில் : வெளியானது அறிவிப்பு

0

2048ஆம் ஆண்டு இலங்கையை உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற்றக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

மக்கள் நிராகரிப்பு

1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தான் இருந்தபோதும் மக்கள் தம்மை நிராகரித்த போதும், கஷ்டத்தில் இருந்த மக்களை காப்பாற்றியதாக விக்ரமசிங்க அன்றைய தினம் உண்மையைக் கூறினார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Source: https://ibctamil.com/article/electon-ranil-compete-as-an-independent-candidate-1718879501

NO COMMENTS

Exit mobile version