Home உலகம் தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: இரண்டாவது முறையாக தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: இரண்டாவது முறையாக தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

0

ஹமாஸ்(Hamas) படைகளுக்கு நிதியுதவி அளிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம், விசா தடைகளை ஐரோப்பிய ஒன்றியம்(EU) அறிவித்துள்ளது.

இஸ்ரேல்(Isreal) ஹமாஸ் தாக்குதலானது ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்து இன்று வரை தொடர்கின்றது.

இதனை தொடர்ந்து ஹமாஸ் படைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதிப்பது இது இரண்டாவது முறையாகும்.

ஹமாஸ் படைகள் 

இதுவரை 12 தனி நபர்கள் மற்றும் 3 நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஹமாஸ் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது ஸ்பெயின்(Spain) நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் சூடான் நாட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் மீதும் தடை விதித்துள்ளது.

மேலும், ஹமாஸ் படைகளின் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான Maher Rebhi Obeid மீதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள தடை

தெற்கு இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் ஒக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த தாக்குதலில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் பணயக்கைதிகளாக பலரையும் பிடித்துச் சென்றனர். இதில் தற்போது 116 பேர்கள் காஸாவில் சிக்கியுள்ளனர்.

42 பேர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் படைகளுக்கு பதிலடியாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டப்பட பலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,700 கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, 27 ஐரோப்பிய நாடுகளும் காஸா போர் தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு வர இதுவரை போராடி வருவதாகவே தெரிகின்றது.

NO COMMENTS

Exit mobile version