ஐக்கிய அரபு அமீரகத்தில்(United Arab Emirates) நேற்று(1) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த காரணத்தால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான காரணம்
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை
துபாயில் பெய்த மழையை விட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்
விமான சேவைகள் ரத்து
இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக இன்று பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
துபாய் விமான நிலையத்திலிருந்து இன்று(2) வரும் அல்லது புறப்படும் வாடிக்கையாளர்கள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |