Home உலகம் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீ வைத்து படுகொலை! எல்லை மீறும் கலவரம்

நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீ வைத்து படுகொலை! எல்லை மீறும் கலவரம்

0

நேபாள முன்னாள் பிரதமர் ஜாலநாத் கனாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் கலவரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காட்மாண்டுவில் உள்ள அவர்களின் இல்லத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து தீவைத்ததில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சமூக வலைதளங்களைத் தடைசெய்ததற்கும், அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் வீடு, பல அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தீ வைத்தனர்.

கட்டுப்பாட்டை மீறிய போராட்டம்

இதேவேளை நிதியமைச்சர் பிஸ்னு பிரசாத் பவுடேல் போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

போராட்டத்தை ஒடுக்க காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 இளைஞர்கள் உயிரிழந்ததுடன், சமூக வலைதளத் தடையை அரசு மீளப்பெற்ற பின்னரும் போராட்டம் தொடர்ந்ததால், நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

இதன் பின்னணியில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி பதவி விலகுவதாக அறிவித்தார். தலைநகர் விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், சில அமைச்சர்கள் இராணுவ ஹெலிகாப்டர்களால் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version