Home உலகம் லெபனானுக்கு 3200 கோடி ரூபாய் உதவி : பிரான்ஸ் அறிவிப்பு

லெபனானுக்கு 3200 கோடி ரூபாய் உதவி : பிரான்ஸ் அறிவிப்பு

0

லெபனானுக்கு (Lebanon) 100 மில்லியன் யூரோ (108 மில்லியன் டொலர்) மதிப்பில் உதவி தொகுப்பை வழங்குவதாக பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் நேற்று (24) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிஸ்புல்லா (Hezbollah) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான போர், பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்ததுடன் 2500 இற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.

உடனடி உதவி

இந்தநிலையில், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி தேவை என்பதனால் ஐக்கிய நாடுகள் 426 மில்லியன் டொலர் உதவி தேவையென அறிவித்திருந்தது.

இதனடிப்படையில், ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பிரான்ஸ் ஜனாதிபதியும் தனது உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், இத்தாலி (Italy) பத்து மில்லியன் யூரோ மற்றும் ஜேர்மனி (Germany) 60 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version