Home உலகம் அமெரிக்க படை வீரர்களுக்கு ட்ரம்ப் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

அமெரிக்க படை வீரர்களுக்கு ட்ரம்ப் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

0

அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில், 14.5 இலட்சம் பேருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகை

குறித்த அனைவருக்கும் 1776 டொலர்கள் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது வரவு செலவு திட்டத்திலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக போர் மற்றும் புதிய இறக்குமதி கொள்கைகள் மூலம் அரசுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அந்த பலனை நேரடியாக வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version