Home உலகம் கண் அசந்த நேரத்தில் அடித்த ஹவுதி : இஸ்ரேலை அதிர வைத்த ஏவுகணைகள்!

கண் அசந்த நேரத்தில் அடித்த ஹவுதி : இஸ்ரேலை அதிர வைத்த ஏவுகணைகள்!

0

ஏமனில் (Yemen) உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா (Hezbollah), ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு ஆகியவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (13.01.2025) திடீரென ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எச்சரிக்கை ஒலி

இதனால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான மறைவிடத்திற்கு சென்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் ஏவுகணையை தடுத்து அழிக்கும் பாதுகாப்பு சாதனம் மூலமாக ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவும் ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்குள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஏமனின் தலைநகரான சானாவை 2014-ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், சுமார் 100 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version