Home உலகம் அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி: 200யை கடந்த பலி எண்ணிக்கை

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி: 200யை கடந்த பலி எண்ணிக்கை

0

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணத்தில் பாரிய அளவில் அழிவை ஏற்படுத்திய ஹெலன் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200யை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஹெலன் சூறாவளியினால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளதுடன் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்துள்ளதுடன் ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்த பலி எண்ணிக்கை

இதேவேளை, புளோரிடாவின் தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூறாவளியின் பாதிப்புகள் தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன் புளோரிடாவிலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version