Home உலகம் இந்தியாவில் அரச சொகுசு பேருந்துகளில் பணிப்பெண் நியமிக்க திட்டம்

இந்தியாவில் அரச சொகுசு பேருந்துகளில் பணிப்பெண் நியமிக்க திட்டம்

0

இந்தியாவின்(India) மகாராஷ்டிராவில் உள்ள அரச சொகுசு பேருந்துகளில் விமானங்களில் போன்று பணிப்பெண்களை நியமனம் செய்ய அம்மாநில அரசு எடுத்துள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரச சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமனம் செய்யவுள்ளதாக மாநில அரசு தீர்மானித்துள்ளது.

பணிப்பெண்கள் திட்டம்

முதற்கட்டமாக மும்பை – புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்பின், மகாராஷ்டிராவின் மற்ற முக்கிய நகரங்களில் இயங்கும் சொகுசு பேருந்துகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது.

‘ஷிவ்நேரி சுந்தரி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இப்பெண்கள், பயணிகள் பேருந்துகளில் ஏறும்போது அவர்களை வரவேற்பதற்கும், பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவதற்கும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில்,

“அரசு பேருந்தின் மோசமான நிலைமைகள் மற்றும் பேருந்து நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை செய்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version