புதிய இணைப்பு
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேல் மீது Fattah-1 ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது.
2024 ஒக்டோபர் முதலாம் திகதி இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலின் போது, அது டசின் கணக்கான Fattah-1 ஏவுகணைகளையும் இஸ்ரேலை நோக்கி ஏவியது.
இருப்பினும், தற்போதைய போரில் Fattah ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முதலாம் இணைப்பு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை டெல் அவிவின் ஒரு பகுதிக்கு வெளியேற்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்போது, வடக்கு டெல் அவிவின் ஒரு பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு குடியிருப்பாளர்களுக்கு எபிரேய மொழியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானின் ஒரு பகுதியிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி, இஸ்ரேல் பாதுகாப்பு படை எச்சரிக்கையொன்றை வெளியிட்டு அதிரடியாக தாக்குதல்களை தொடங்கியதையடுத்து ஈரானும் தற்போது அதே மாதிரியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலிய எச்சரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள வரைபடத்தைப் போன்ற ஒரு வரைபடத்தை ஈரானும் வெளியிட்டுள்ளது.
Urgent Warning – English follows the Hebrew text | אזהרה דחופה – הטקסט באנגלית מופיע לאחר העברית
אזהרת בטחונית מיידית | אזור נווה צדק, תל אביב
לידיעת כל השוהים באזור המופיע במפה המצורפת (רמת החייל בצפון־מזרח תל אביב):
עזבו את האזור מיידית.
למען ביטחונכם, عזבו את המקום בהקדם… pic.twitter.com/IynRV00R67— Daily Iran Military (@IRIran_Military) June 18, 2025
