Home உலகம் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் -3யின் அதிரடி : இஸ்ரேலை நோக்கி சீறிப் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்...

ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் -3யின் அதிரடி : இஸ்ரேலை நோக்கி சீறிப் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள் : வெற்றியா..! தோல்வியா..!

0

கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதற்கிடையில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஒபரேஷன் ரைசிங் லையன்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’. ஆனால் இப்போது ஈரான் திருப்பி தாக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு ஈரான் வைத்திருக்கும் பெயர் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3.

இந்த நிலையில், ‘ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3’ என்ற பெயரில் ஈரான் இன்று காலைமுதல் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்திருந்தது.

இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 6 இடங்களை மட்டுமே குறி வைத்து  தாக்குதல் நடத்தியிருக்கிறோம் என்று ஈரான் கூறியிருக்கிறது.


1. டெல் அவிவ் பொருளாதார மையம்

2. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடம்

3. நிதியமைச்சகத்தின் கட்டிடம்


4. Tel Nof விமானத்தளம்

5. Haifa-வில் சில இடங்கள்

6. காசா கடல் எல்லைக்குள் இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம்

இந்த 6 இடங்கள் மீது மட்டுமே ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டிருக்கிறது. 

முழு உலகத்தையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி ஈரானின் True Promise-3 பெருவெற்றி பெற்றதா அல்லது பின்னடைவை சந்தித்ததா என விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய “உண்மையின் தரிசனம் ” நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/lXVaTa7ZBy8

NO COMMENTS

Exit mobile version