Home உலகம் இஸ்ரேலின் அதிரடி பாய்ச்சல்: கையிலேயே காத்திருக்கும் எமன்

இஸ்ரேலின் அதிரடி பாய்ச்சல்: கையிலேயே காத்திருக்கும் எமன்

0

இஸ்ரேலின் (Israel) நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து யாரும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளதாக போர் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

காசா (Gaza) மீது கோரமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் (Lebanon) நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை குறி வைத்து பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் மீது முறைபாடுகள் எழுந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களது தொலைபேசிகள் உள்ளிட்டவை ஒட்டு கேட்பதாக முறைபாடு எழுந்திருக்கிறது.

இதை அடுத்து அவர்கள் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தொலைபேசிகள் பயன்படுத்தும் போது இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதன் காரணமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் பேஜர்களை வைத்தே தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

கடந்த 17ஆம் திகதி தெற்கு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பல பேஜர்கள் திடீர் திடீரென வெடித்தன. குறிப்பாக ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது.

உலக நாடுகள் 

நாட்டில் சுமார் 1000 பேஜர்கள் வெடித்து சிதறியாக கூறப்படும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 2800க்கு மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிய வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இதற்கிடையே இஸ்ரேல் நடத்தி இருப்பது சைபர் கிரிமினல் தனத்தின் உச்சம் என போர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல்வேறு வகையிலான போர்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இராணுவ அமைப்புகள்

ஆனால் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது இதுவரை கண்டிராதது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்பது தவறான முன்னுதாரணம் தவறானது என போர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் வருங்காலங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல மற்ற நாடுகளின் இராணுவ அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருக்க வேண்டும் என்றால் தாங்களாகவே தகவல் தொடர்பு சாதனங்களையும் ஆயுதங்களையும் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version